• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூதாட்டி கொலை வழக்கில் மணிப்பூர் இளைஞர் கைது

December 22, 2016 தண்டோரா குழு

கோவை மூதாட்டி கொலை வழக்கில் மணிப்பூரை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தப்பிச் செல்ல முயன்ற போது காலில் அடிபட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (83). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். டிசம்பர் 19 ஆம் தேதி பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை காவல் துறையினர் கைப்பற்றி புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டிருந்தது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்திய காவல் துறையினர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமீர் கான் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

சமீர் கான் கேரளத்தில் உள்ள தனியார் உணவாக விடுதியில் சப்ளையராகப் பணியாற்றி வந்தார் என்றும், கோவையில் உள்ள நண்பரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வந்துள்ளார் என்றும் காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீர்கானை சம்பவ இடத்திற்கு விசாரனைக்காக அழைத்துச் சென்றபோது அவர் தப்பியோட முயன்றார். அப்போது, காலில் பலத்த காயமடைந்தார். அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க