• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை

September 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹெபீப்ரகுமான் என்பவரது மகன் மைதீன் (20) என்பவர் கடந்த 10.11.2020 -ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் மைதீன் (20) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை மாவட்டம் கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று குற்றவாளி மைதீனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் பச்சண்ணன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

மேலும் படிக்க