• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூடு விழா காணும் அரசு அச்சகம்

October 3, 2017 தண்டோரா குழு

கோவை பிரஸ்காலனியில் செயல்படும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அச்சகத்திற்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு அச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 17 அச்சகங்கள் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தையடுத்த பிரஸ்காலனியில் மத்திய அரசின் அச்சகம் இயங்கி வருகிறது. இந்த அச்சகங்களில் தபால்துறையில் பயன்படுத்தும் கடிதங்கள், கார்டுகள், ஏர்போர்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் துறை சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் அச்சடிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த அச்சகத்தை மூடிவிட்டு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் செயல்படும் அச்சகத்தோடு இந்த அச்சகத்தை இணைக்க முடிவெடுத்துள்ளது. இதேபோல மைசூர்,கேரளாவில் உள்ள அச்சகத்தையும் மூடுவிழா நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

கோவையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த அச்சகத்திற்கு சொந்தமாக 132 ஏக்கர் நிலம் உள்ளது.தற்போது இந்த இடத்தில் பழங்குடியினரின் பள்ளிக்கூடம், தபால்நிலையம், ரேசன்கடைகள் மற்றும்
அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலங்கள் மற்றும் சொத்துக்களை விற்பதற்கும் மத்திய அரசு  முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்த அச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில்,

” மத்திய அரசு அதன் பங்களிப்பில் இயங்கும் ஒவ்வொரு துறையையும் பாரபட்சமாக பார்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த அச்சகத்தை மூடும் ஏற்பாட்டை மத்திய அரசு செய்துள்ளது. லாபகரமாக இயங்கும் இந்த அச்சகத்தை மூடவேண்டிய அவசியமே இல்லை. நடப்பாண்டில் ஏழரை கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த அச்சகத்தின் மூலம் லாபமாக மட்டும் மத்திய அரசிற்கு ஒன்னரைக்கோடி ரூபாய் அளித்துள்ளோம்.

மேலும், மூன்று வருடம் தொடர்ந்து இயங்குவதற்கான ஆர்டர்கள் எங்கள் அச்சகத்திற்கு உள்ளது. இதெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அடாவடியாக முடிவெடுத்துள்ளது என குற்றம் சாட்டினார்கள்.

இந்த அச்சகத்தினை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மத்திய அரசு அச்சகத்தின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது, இந்த அச்சகத்தை மாதிரி அச்சகமாக மாற்றுகிறோம். தொடர்ந்து இங்கேயே இயங்கும் என உறுதியளித்து சென்றனர். ஆனால் ஊழியர்களிடம் அளித்த வாக்குறுதியை மீறி இந்த அச்சகத்தை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது வேதனையை அளிக்கிறது என்றனர்.

தென் மாநிலங்களில் தமிழகம்,கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் அச்சகங்களையும் மூடிவிட்டு அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வடமாநிலங்களில் உள்ள மத்திய அரசின் அச்சகங்களுக்கு செலவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவினை  கைவிட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க