• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூடுபனி காரணமாக டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 13 வரை 8 ரயில் சேவை ரத்து

November 27, 2017 தண்டோரா குழு

மூடுபனி காரணமாக டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 13 வரை 8 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூடுபனி காரணமாக ஆக்ரா இன்டர்சிட்டி, 12179 லக்னோ ரயில்நிலையம்- ஆக்ரா கான்ட்ட் எக்ஸ்பிரஸ், 15209 சஹர்சா-அம்ரிஸ்தர் எக்ஸ்பிரஸ், 14674 அம்ரிஸ்தர்-ஜெயின்நகர் ஷஹீத் எக்ஸ்பிரஸ் மற்றும் லக்னோ-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், குவாலியர்-பாராயுணி எக்ஸ்பிரஸ், லக்னோ ரயில்நிலையத்தில் நிறுத்தப்படும். மீண்டும் அதன் சேவை அங்கிருந்து தொடங்கும். ஜெய்நகர்-புதுதில்லி எக்ஸ்பிரஸ், அசாம்கர்-டெல்லி கைஃபாட் எக்ஸ்பிரஸ், பராயுணி-அம்பலா ஹரிஹர்நாத் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதைபோல், ஜெய்நகர்-அம்ரிஸ்தர் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை பயண சேவை இருக்காது. “மூடுபனி காரணமாகதான் மேலே கூறப்பட்ட ரயில்களில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தென் கிழக்கு ரயில்வே பொது உறவு அதிகாரி (CPRO)தெரிவித்தார்

மேலும் படிக்க