• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 2 ஆயிரம் சன்மானம் – யங் இந்தியன்ஸ் பவுண்டேசன்

October 30, 2019 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாக யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவ்வமைப்பின் செயலாளர் விஷ்ணுபிரபு,

தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாக தெரிவித்தார். 9150226634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ருபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணிகளை விரிவுப்படுத்த உள்ளதாகவும், நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் உயிரிழப்பே இறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க