• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

May 6, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக உலக அமைதியையும், மனிதர்களிடையே சகோதரத்துவம் – சமத்துவம் – மனிதநேயத்தையும் போதித்து, சமூக நன்மைகளுக்காக பல்வேறு அறிவுரைகளை வழங்கிய முஹம்மது நபியின் வாழ்வியல் வழிகாட்டுதலை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை மே மாதம் 7 ஞாயிறு அன்று மாலை 4 மனி முதல் கோவை வ.உ.சி மைதானத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில், மதரஸா மாணவ மாணவிகள் முஹம்மது நபி் பற்றிய உரை நிகழ்வும், அர்ரிளா இஸ்லாமிய பெண்கள் கல்வியகத்தின் மாணவிகள் சார்பாக “முத்தலாக் மற்றும் பொது சிவில் சட்டம்” குறித்த கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுஃப் அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பிலும் , மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் நபிவழியில் ஒன்றினைவோம் என்ற தலைப்பிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் இறுதித் தூதரின் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் மாமனிதர் பேனிய பெண்ணுரிமை, மனித நேயம் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளனர்.

இம்மாநாட்டுற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டத்தின் சார்பில் அனைத்து சமூக மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க