முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவுப்படி கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் பல ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.கட்சியனர் துவக்கி கடிதம் அனுப்பி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக,கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பெறப்பட்ட கடிதங்களை தமிழக முதல்வருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக நடைபெற்றது.கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர் முகம்மது இசாக்,மாவட்ட பொருளாளர் முகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இதில், முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோசங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து,ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் உசேன்,செய்தி தொடர்பாளர் மன்சூர்,பகுதி நிர்வாகிகள் சதக்கத்துல்லா,ஷேக் பரீத்,அர்சத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது