June 30, 2020
தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 மாத ஆண் சிசுவை,போத்தனூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மற்றும் தன்னார்வர்கள் ஆத்துப்பாலம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
கோவை வெள்ளளூர் பகுதியிலுள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்புக்கு பின்பகுதியில் இறந்த நிலையில் ஆண்குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து போத்தனூர் காவல் நிலைய தலைமை பெண் தலைமை காவலர் மற்றும் அறக்கட்டளையினர் ஆத்துப்பாலம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.இதில் பெண் தலைமை காவலரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.