July 12, 2018
தண்டோரா குழு
தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
இதுமட்டுமின்றி இவர் சில நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில்,இவர் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் குறித்து பேசி வருகின்றார்.இதற்கிடையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு.மிகபெரிய இயக்குநர் ஒருவர் படவாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.நேரம் வரும்போது அதைப்பற்றி கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், ‘என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் உள்ளதா? வெள்ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம்.எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தீர்கள். நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை.ஆம் நிறைய ..? ‘நீங்கள் நல்ல மனிதர்’ என பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இன்று பிரபல நடிகரான ஸ்ரீ காந்த் பற்றி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்,
5 வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது பார்க் ஓட்டலில் நடந்த பார்ட்டி ஞாபகம் இருக்கா மிஸ்டர்?நீ எனது —- சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… என்னுடன் டான்ஸ் ஆடும் போது எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னாயே..ஞாபகம் இருக்கா… என அவர் ஒரு நடிகரின் படத்தை போட்டு டுவிட் செய்து உள்ளார்.
இதுமட்டுமின்றி #Tamilleaks எனவும் பதிவிட்டுள்ளார்.இதனால் மேலும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக சிக்குவார்கள் எனவும் தன்னுடைய பதிவில் மறைமுகமாக பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.