• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண்

March 25, 2023 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (44).இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு கோவை போத்தனூர் சத்ய சாய் நகரை சேர்ந்த ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் வந்தனர். அப்போது ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேசுடன் பழகி வந்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இருந்த போதும் ராஜேஷ் ஹேசல்ஜேம்ஸ் உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். அப்போது அவர் தந்தையுடன் வசித்து வருவதால் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.ராஜேஷ் ரூ 90 ஆயிரம் கடனாக கொடுத்தார்.தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதற்கு ராஜேசிடம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கினார்.

இந்நிலையில் பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இதுகுறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டுள்ளார்.அப்போது ராஜேசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.அதன் பின் ராஜேஷ் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டால் தான் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து மிரட்டியுள்ளர்.

இதை தொடர்ந்து ராஜேஷ் கோவைக்கு வந்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து அங்கிருந்து இவரது நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டது தெரிந்தது இதையடுத்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க