December 17, 2025
தண்டோரா குழு
சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்கி வரும் ஏர்பிஎன்பி தற்போது மும்பையில் உள்ள மகாலட்சுமி ரேஸ்கோர்சில் ஜனவரி 24, 25-ல் நடக்கும் சர்வதேச இசை கலைஞர்கள் பங்கேற்கும் ‘லோலாபலூசா இந்தியா 2026’ இசை நிகழ்ச்சியை காண சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது இந்தியாவில் ஏர்பிஎன்பி-க்கு ஒரு உற்சாகமான புதிய அத்தியாயத்தில் நுழைவதைக் குறிக்கிறது. மேலும், பயணம், கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் மக்களை இணைக்கும் இந்நிறுவனம் தற்போது இசைத் துறையிலும் கால் பதித்துள்ளது. இதற்கான முன் பதிவு துவங்கி உள்ள நிலையில், இதன் டிக்கெட் விலை ரூ. 5850 ஆகும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இது உறுதி செய்யப்படும்.
பார்வையாளர்கள் தங்கள் சொந்த ஊரியில் இருந்து மும்பைக்கும் அங்கிருந்து சொந்த ஊருக்கும் தங்கள் சொந்த செலவிலேயே வந்து போக வேண்டும்.ஆக்கப்பூர்வமான அமர்வுகள் முதல், லோலாபலூசா இந்தியா ஒரு வித்தியாசமான தொகுப்பாளரால் தொகுத்து அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு அனுபவமும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இசை விழாக்களில் ஒன்றின் பின்னணியில் உள்ள உலகத்தைப் பற்றிய மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.
இது குறித்து ஏர்பிஎன்பி நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான தலைவர் அமன்ப்ரீத் பஜாஜ் கூறுகையில்,
நேரடி இசை நிகழ்ச்சியும், பயணமும் எப்போதும் இணைந்தே இருக்கின்றன – மக்கள் விழாக்களில் மட்டும் கலந்து கொள்வதில்லை, அவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரங்களை ஆராய்ந்து, அந்த இடங்களை சுற்றிப் பார்ப்பதோடு அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் அறிய விரும்புகிறார்கள். லோலபாலூசாவுடனான எங்கள் கூட்டணி என்பது, எங்களின் தனித்துவமிக்க ஏர்பிஎன்பி அனுபவங்கள் மூலம் ரசிகர்களை அந்த உலகத்திற்கு மேலும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.
இது நிகழ்ச்சிகளை வெறும் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், அவற்றுடன் ஒரு நெருங்கி தொடர்பை ஏற்படுத்துகிறது.இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க பாடகர் – பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் கதைசொல்லிகளில் ஒருவரான அங்குர் திவாரியுடன் இணைந்து திரைக்குப் பின்னணியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வாய்ப்பும் வழங்குகிறது.24-ந்தேதி நடைபெறும் இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் இரட்டையர்களான ஓஏஎப்எப் மற்றும் சவேராவுடன் மேடைக்குப் பின்னால் சென்று, அவர்கள் நிகழ்ச்சிக்கு எவ்வாறு தயாராகிறார்கள் மற்றும் தங்கள் குழுவினருடன் அவர்கள் எவ்வாறு உரையாடுவார்கள்.
மேலும் இந்தியாவின் மிகவும் புதுமையான கலைஞர்களான அவர்கள் இருவரும், ஸ்டுடியோ முதல் மேடை வரை இசையை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக இது இருக்கும்.இதேபோல் 25-ந்தேதி லோலாபலூசா இந்தியாவில் பங்கேற்கும் ராஷி சங்கவியுடன் இணைந்து, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சுவாரஸ்யமான நேரலை இசை நிகழ்வுகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறித்த ஒரு உள்விளக்கச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் ஒரு இசைப் பிரியராக இருந்தாலும் சரி,அல்லது பெரிய அளவிலான நேரலை நிகழ்வுகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இசைக்குப் பின்னால் உள்ள மாயாஜாலத்தைக் காண ஒரு வாய்ப்பை வழங்குகிறது.