• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

December 5, 2019 தண்டோரா குழு

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றும், பெண் ஆளுமைக்கு முன்னுதாரணமாகவும் அனைவராலும் போற்றப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அதிமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை குணியமுத்தூர் பகுதியில் அக்கட்சி தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து. மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இதில், மதனகோபால் உட்பட அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் கோவை கரும்புக்கடை 86 வது வார்டு செயலாளர் முஜி தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தி மறியாதை செலுத்தினார்கள். பின்னர் குணியமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவை இடையர்பாளையம் வரையிலும் அமைதி ஊர்வலம் நடந்தது இதில் ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க