February 28, 2018
தண்டோரா குழு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று(பிப் 28)கைது செய்யப்பட்டார்.
அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார் இன்று கைது செய்தனர்.
இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் சிபிஐ போலீசார் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். இதே விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.