October 18, 2021
தண்டோரா குழு
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட் 6 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.