June 29, 2021
தண்டோரா குழு
உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ப்ரைவேட் லிமிடெட், இன்சூர் டெக் என்றழைக்கப்படும் காப்பீட்டு தொழில்நுட்பத்தில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மலேசியாவில் செயல்பட்டு வரும் தனது முழு உரிம துணை நிறுவனமான கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் சென்டிரியன் பெர்கத் (201301013805) மூலமாக, முன்னணி காப்பீடு தொழில்நுட்ப நிறுவனமான ஏத்தன்ஸ் சென்டிரியன் பெர்கத் நிறுவனத்தை (199801000924) கையகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையானது, காப்பீட்டு தொழில்நுட்பப் பிரிவில் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் யுக்திகளில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது.
இன்ஸ்சூரன்ஸ் தொழில்நுட்ப துறையில் ஏத்தன்ஸ் நிறுவனம், பொது காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு, ஒரு குழுவாக காப்பீட்டு தொகையைக் செலுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அளிக்கும் டகாஃபுல் திட்டம் உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்கு, புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. இதனால் இந்நிறுவனம் வழங்கும் தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுக்கு காப்பீட்டு சந்தையிலும், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிறுவனத்தின் நெட்வொர்க் வலுவாக உள்ளதால், ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டுவரும் அதிக எண்ணிக்கையிலான காப்பீட்டு நிறுவனங்களுக்கு தனது சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், கையகப்படுத்தும் நடவடிக்கையினால், ஏத்தன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அந்நிறுவனம் வழங்கும் ப்ரத்யேக காப்பீட்டுத் தொழில்நுட்பங்கள், காப்பீட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் மனிதவளம் மற்றும் தயாரிப்புகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாய்ப்பாக அமையும். இதன் மூலம் காப்பீட்டு தொழில்நுட்பப் பிரிவில் கேஜிஐஎஸ்எல் ஆழ்ந்த நிபுணத்துவமிக்க ஒரு நிறுவனமாக தனது செயல்பாடுகளை முன்னெடுக்கும்.
கேஜிஐஎஸ்எல், மலேசியாவின் காப்பீட்டு தொழில்நுட்ப சந்தையில் 2006 முதல் செயல்பட்டு வருகிறது. பிஓஎஸ் எனப்படும் பாயிண்ட் ஆஃப் சேல் மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத பிற காப்பீட்டு பிரிவுக்கான உரிமை கோரல்களை கையாளுவதில் மலேசியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது இந்நிலையில், ஏத்தன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலமாக, காப்பீட்டை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் காப்பீடு தீர்வுகளுக்கான கட்டமைப்பை வழங்கும் இன்ஸ்சூரன்ஸ் சொல்யூஷன் ஃப்ரேம்வொர்க் ஆகியவை கேஜிஐஎஸ்எல் செயல்திறனை மேலும் அதிகரிக்கும்.
ஏத்தன்ஸ் நிறுவனத்தின் நிபுணத்துவம் கூடுதலாக சேர்வதால், ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சந்தையில் ஆயுள் காப்பீடு, ஆயுள் காப்பீடு அல்லாத பிற காப்பீடுகள் மற்றும் டகாஃபுல் காப்பீடு ஆகியவற்றில் கேஜிஐஎஸ்எல் வலுவாக காலூன்றும்.
கேஜிஐஎஸ்எல்-ன் இயக்குனரும் தலைமை நிர்வாக அலுவலருமான பிரசாத் சண்முகம் பேசுகையில்,
இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையினால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். காப்பீட்டை அடிப்படையாக கொண்ட ஏத்தன்ஸின் தொழில்நுட்ப தயாரிப்புகள், டகாஃபுல் திட்டங்கள் மற்றும் மத்திய கிழக்குச் சந்தையில் ஏத்தன்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் அபாரமான செயல்பாடு போன்ற அம்சங்கள் கேஜிஐஎஸ்எல்-ன் காப்பீட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளில் இதுவரையில் இல்லாதவை ஆகும்.
இதற்கான திறனைக் கட்டமைக்க நமக்கு சில ஆண்டுகளாவது ஆகும்;அதனால், இந்த கையகப்படுத்துல் நடவடிக்கையின் மூலம் இவையனைத்தும் கேஜிஐஎஸ்எல்-க்கு உடனடியாக பலம் சேர்க்கும். ஏத்தன்ஸின் பணியாளர்கள் கேஜிஐஎஸ்எல்-ல் உள்ளது போன்றே ஒருமைப்பாடு, கலாசாரம் மற்றும் மதிப்பீட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளதால், இந்த இரு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு சுமூகமானதாகவும், விரைவானதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
இது குறித்து கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசோக் பக்தவச்சலம் பேசுகையில்,
வாடிக்கையாளர்கள், நிறுவன செயல்பாடுகள் மற்றும் பணியாளர்களுக்குச் சிறந்த மதிப்பை வழங்கவேண்டுமென்ற ஒரே நல்லெண்ணத்துடன்,அதையே நோக்கமாக செயல்படுத்த இரண்டு முன்னணி காப்பீட்டு தொழில்நுட்ப நிறுவனங்களையும் இந்த கையகப்படுத்துதல் ஒன்றிணைந்திருக்கிறது.
திறமைமிக்க தலைமை மற்றும் எதையும் சாதித்து காட்டும் உத்வேகமுள்ள குழுவுடன், கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது கேஜிஐஎஸ்எல். இந்நிலையில் நாங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையானது எங்களது செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது.அதனால், அடுத்த 3 ஆண்டுகளில் எங்களது வளர்ச்சி இன்னும் பல மடங்காக இருக்குமென்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.