• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது..!

July 30, 2019 தண்டோரா குழு

நீண்ட விவாதத்துக்குப்பின் மாநிலங்களவையில் `முத்தலாக் தடை மசோதா’ நிறைவேறியது.

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது. அதன்பின்னர் புதிய அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார்.முத்தலாக் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், இந்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர், திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் விநியோகிக்கப்பட்ட சீட்டுகள் மூலம் வாக்களிப்பு நடைப்பெற்றது. வாக்களிப்புக்கு பின்னர் மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அதிமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஓட்டெடுப்பில் டிஆர்எஸ் , தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.. பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.இதனைத்தொடர்ந்து, ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது முத்தலாக் தடுப்பு மசோதாவிறகு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன் முத்தலாக் தடுப்பு மசோதா அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க