August 9, 2018
தண்டோரா குழு
முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு ஆண், தன் மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது மரபாகும். இது,பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக கருதப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனைத் தொடர்ந்து ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதற்கிடையில், முத்தலாக் மசோதாவில், திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், முத்தலாக் மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமின் கிடையாது என்ற பிரிவு தொடரும் எனவும், நிதிபதி விரும்பினால் மட்டுமே ஜாமின் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.