December 12, 2020
தண்டோரா குழு
கோவை இராமநாதபுரம் ஒலமப்ஸ் 80 அடி சாலை பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பசும்பொன் முத்தராமலிங்க தேவர் உருப படம் வைக்கபட்டது. தேவர் ஜெயந்தி அன்று மேடைகள் அமைக்கபட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு கோவில் பூசாரி வழக்கமான பணிகளை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் கோவில் நடையை சாத்திவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார். இன்று காலை அவரது மனைவி கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய வந்தபோது வளாகத்தின் உள்ளே வைக்கபட்டு இருந்த முத்தராம்லிங்க தேவரின் உருவ படம் கிழிக்கபட்டு இருந்ததை கண்டு அதிரிச்சி ய்டைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே தெரிய வர ஏராளமான பொதுமக்களும் தேவர் அமைப்பை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தேவர் உருவபடத்தை கிழித்தவர்கள் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.