• Download mobile app
01 Jan 2026, ThursdayEdition - 3613
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதுகு தண்டுவட முறிவு அறுவை சிகிச்சையில் விரைவில் குணமடைய நவீன முறை சிகிச்சை – மருத்துவர் தண்டபாணி தகவல்

January 1, 2026 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில் செயல்பட்டு வரும் பிரீத்தி மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரீத்தி மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான புதிய மையம் துவங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரீத்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தற்போது சர்க்கரை நோய் பாதித்த டைப் 1 மற்றும் 2 வகை நோயாளிகள் தொடர்ந்து எடுத்து வரும் இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய (Afreeza) அஃப்ரீசா எனும் இன்ஹேலர் வகை இன்சுலினை பயன்படுத்துவதால் வலியில்லாமல் உடலில் செலுத்தி கொள்ள முடியும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பிரீத்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் தண்டபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தற்போது விபத்து,தடுமாறி கீழே விழுவது போன்ற காரணங்களால் ஏற்படும் முதுகு தண்டுவட முறிவை குணப்படுத்த நவீன வகை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாக கூறினார்.டைட்டானியம் வகையிலான ஸ்க்ரூ மற்றும் ராடுகளை இந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதால் நோயாளிகள் விரைவாக எழுந்து நடக்கும் நிலைக்கு திரும்ப முடியும் என அவர் கூறினார்.

இது போன்ற சிகிச்சைகளை வயது முதிர்ந்தவர்களும் மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க