• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதுகு தண்டுவட பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க நன்கொடையாக ரூபாய் 40 லட்சம் வாரி வழங்கிய 87 வயது மூதாட்டி.

November 13, 2024 தண்டோரா குழு

கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு கோவை நிர்மலா கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரூபாய் 40 லட்சம் நன்கொடை வழங்கினார்.

நன்கொடை வழங்கும் நிகழ்வு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகு தண்டுவடம் மறுவாழ்வு மையத்தில் இன்று நடைபெற்றது இதில் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகர் இயக்குனர் ரமாராஜசேகர். மற்றும் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

முதுகு தண்டுவட துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது,

ஏழ்மை நிலையில் உள்ள முதுகு தண்டுவட முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கங்கா முதுகு தண்டுவட சிகிச்சை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் முதுகு தண்டுவட முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன சிகிச்சையில் அளிக்க மருத்துவ கருவிகள் அளிப்பதற்காக ரூபாய் 40 லட்சம் நிர்மலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கமலா வழங்கி உள்ளார் அவருக்கு மருத்துவமனையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளித்து அவர்கள் அவர்களது குடும்பம் மற்றும் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு பேரு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

பேராசிரியர் கமலாவின் சகோதரர் ரோட்டரி தலைவர் ராஜகோபால் கூறியதாவது,

எனது சகோதரி கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக குணமாகி வருகிறார்.

கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்தோம் அதற்கு எங்களுடைய உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு மருத்துவரை தொடர்பு கொண்டோம்.

இதுபோல் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு நாங்கள் செய்த உதவி பேரு உதவியாக இருக்கும். கமலாவின் சகோதரர் ராஜகோபால் தெரிவித்தார்.

மேலும் படிக்க