August 6, 2019
தண்டோரா குழு
முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா பேட்டியளித்தார்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வீட்டுக்காவலில் உள்ள பருக் அப்துல்லாவிடம் சில செய்தியாளர்கள் சந்தித்து கருத்து கேட்டனர். தான் வீட்டுக் காவலில் வக்கபட்டிருந்தேன் என்று ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டினார்.
அப்போது பேசிய அவர்,
370 -வது சட்டப்பிரிவு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் அரசுக்கு அவசரம் என்ன? காஷ்மீர் இந்தியாவில் இருந்து ஒருபோதும் பிரிந்து போக விருப்பமில்லை.காஷ்மீர் மக்களின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் பறிக்க வேண்டாம். ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு பிரித்து இருப்பது ஒருவரின் உடலை துண்டு போடுவதற்கு சமமானது. மக்களின் இதயங்களையும் இரண்டாக கூறு போடுவார்களா என மத்திய ஆட்சியாளர்கள்? காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது மத்திய அரசு கொடுத்த உத்தரவாதத்தை மீறிவிட்டதாக ஃபருக் அப்துல்லா குற்றம் சாட்டினார். ஒற்றுமைக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா பேட்டியளித்தார்.
மேலும், முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள் பரூக் அப்துல்லா ஆவேசமாக பேசிய அவர் எனது மகன் ஒமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.