• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

November 21, 2021 தண்டோரா குழு

தமிழக முதல்வர் வருகையையொட்டி நாளை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளை காலை 6:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கனரக வாகனங்கள் கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை. அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் சந்திப்பு விரியம்பாளைம், கைகோலாபாளையம்,
வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலையில் இருந்துவரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி சாலையை அடைந்து சரவணம்பட்டி வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவஇந்தியா சாலை, ராமகிருஷ்ணா கல்லூரி, 100 அடி சாலை மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லவேண்டும்.

திருச்சி சாலையில் இருந்து வரும் பேருந்துகள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசுமருத்துவமனை, லங்காகார்னர், கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

பழைய மேம்பாலம் வழியாக அவினாசி சாலையில் வரும் வாகனங்கம் ஜேஎம் பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம் ரயில்நிலையம் வழியாக திருச்சி சாலைக்கு செல்லவேண்டும்.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக செல்ல அனுமதியில்லை. மாற்று வழியாக அவினாசி சாலைக்கு செல்ல டிஐஜிஅலுவலகம் வந்து ரெட்பீல்ட் வழியாக புலியகுளம் சென்று இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர் வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

எல்.ஐ.சி சாலையில் வாகனங்கள் செல்லகூடாது.மத்தியபேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர் அவினாசி, பல்லடம் செல்லக்கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு. ஆர்.வி.ரவுண்டானா, மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி, மணிஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமிமில் சந்திப்பில் அவினாசி சாலையை அடைந்து மேற்குறிப்பிட்ட பகுதிகருக்கு செல்லவேண்டும்.

அவனாசி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஜிகேஎம், அண்ணா சிலை, எல். ஐ. சி வழியாக வராமல் லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க