• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் மற்றும் அதிமுக பொது செயலாளர் ஆளுநருடன் சந்திப்பு

February 9, 2017 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைத் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வியாழன் மாலையில் சந்தித்தார். அதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை 7.45 மணியளவில் சந்தித்தார்.

தமிழ்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவு எடுப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

தன்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா குறித்த குற்றச்சாட்டைக் குறித்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஆளுநரிடம் விவரிப்பார். தனக்கு 13௦ அதிமுக அமைச்சர்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்பதை குறித்து பொது செயலாளர் சசிகலா உரிமை கோரிக்கை வைக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மீதுள்ள சொத்து வழக்கு குறித்து தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருந்து அதற்கு பின்னரே முடிவு எடுப்பார் என்று தகவல் வந்துள்ளது. மேலும் தமிழக முதல்வரை ஏன் கட்டயப்படுதில் ராஜினாமா செய்யப்பாட்டார் என்பதை குறித்தும் அவர் விசாரிப்பார் என்று கருதப்படுகிறது.

சட்ட நிபுணர் சோலி எஸ். சோராப்ஜி கூறுகையில், “உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் உடைய முடிவை ஒத்திவைப்பது நல்லது. தேவைப்பட்டால், ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார். மற்றொரு பக்கம், ஆளும் கட்சிக்குள் நடக்கும் இந்த சண்டை அடங்கிய பிறகு இது குறித்து முடிவு எடுக்கலாம்” என்றார்.

மேலும் படிக்க