February 6, 2021
தண்டோரா குழு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவையில் மறைந்த முதல்வர் ஜெயல்லிதாவின் பிறந்த நாளையொட்டி ஏழை,எளியோருக்கு நலத்திட்டம் மற்றும் கல்வி உதவி தொகை உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கட்சியில் இணைவது என முப்பெரும் விழா கோவை கவுண்டம்பாளையம் நடராஜர் நகரில் நடைபெற்றது.
அம்மா சேவா டிரஸ்டின் தலைவரும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் துணை செயலாளர் சோனாலி பிரதீப் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழக உள்ளாட்சி துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்,மற்றும் சலவை பெட்டிகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் சக்கர நாற்காலி வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசினார்.
அப்போது அவர்,
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்ட அவர்,கொரோனா கால நேரத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். .
முன்னதாக விழாவில் அமைச்சருக்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார்,அம்மன் கே.அர்ச்சுணன், ஆறுக்குட்டி,பகுதி கழக செயலாளர் சின்னசாமி,அம்மா சேவா டிரஸ்ட் துணை தலைவர் பிரதீப்,மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் கண்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.