• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நவீன ராஜராஜசோழன் – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

February 13, 2020 தண்டோரா குழு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நவீன ராஜராஜசோழன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். டெல்டா பகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் 1 லட்சம் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்தார். நாம் கரிகாலனை பார்த்து இருக்கிறோம், ராஜராஜசோழனை பார்த்து இருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரை நவீன ராஜராஜசோழனாக தமிழ்நாடு பார்க்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க