May 26, 2018
தண்டோரா குழு
முதல்வர் உத்தரவுப்படி ஆலைக்கான மின்சாரம் , குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்டெர்லைட் ஆலை இயக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆலை இயங்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் உத்தரவுப்படி, ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் காயமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் கருத்து குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது ஆலை இயங்கவில்லை என்பது உறுதி.ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் காயமடைந்தவர்களில் 90 % பேர் அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடி நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. பெட்ரோல் பங்க், வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்றார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் கருத்து குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது ஆலை இயங்கவில்லை என்பது உறுதி என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.