• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்

September 19, 2019 தண்டோரா குழு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள், கட்சி சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க