• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலையுடன் செல்பி பிரான்ஸ் பெண் காயம்

January 3, 2017 தண்டோரா குழு

தாய்லாந்து தேசிய பூங்காவில் முதலையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் முதலை கடித்ததில் படுகாயமடைந்தார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் க்யோ யாய் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாங்காக் நகரை சுற்றிப் பார்க்க வரும்போது அந்த பூங்காவைப் பார்க்காமல் செல்வதில்லை. அவ்வாறு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி அங்கு வந்த போது புத்தாண்டு தினத்தன்று இச்சம்பவம் நேர்ந்துள்ளது.

இது குறித்து தேசிய வனவிலங்கு பூங்காவின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 41 வயது பெனெடுலியே லெஸெஃப்லி என்ற பெண் தனது கணவருடன் தேசிய வனவிலங்கு பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முதலை தண்ணீரில் இருந்து வெளியே வந்து கரையில் படுத்திருந்ததைக் கண்டார். அதனுடன் செல்ஃபி எடுக்க விரும்பினார். செல்ஃபி எடுத்ததும் அந்தப் படத்தைக் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

அந்த முதலையின் அருகில் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அது திடீரென்று அவருடைய காலைக் கடித்துவிட்டது. 1௦ அங்குல நீளம், 2 அங்குல ஆழத்துக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதைப் பார்த்த அவருடைய கணவர் அதிர்ச்சி அடைந்து, அப்பூங்காவின் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அத்தகவலை கேட்ட அவர்கள் உடனே லெஸெஃப்லியை மீட்டு, முதலுதவி அளித்துள்ளனர். பிறகு அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கு முன் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை.சம்பவம் நடந்த இடத்தில் முதலைகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை அலட்சியப்படுத்தி, செல்ஃபி மோகத்தால் அந்தப் பெண்ணுக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க