• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலையின் தாக்குதலிலிருந்து தன் தோழியை காப்பாற்றிய சிறுமி

April 5, 2017 தண்டோரா குழு

மூங்கில் குச்சியால் முதலையை அடித்து விரட்டி தனது தோழியை ஆறு வயது சிறுமி காப்பாற்றியுளாள். இந்த சம்பவம் ஓடிஸா மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேந்திரபரா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆறு வயது சிறுமி, பசந்தி தலாய். அவள் அந்த கிராமத்தின் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறாள்.

முதலையின் தாக்குதலால் அவளுக்கு கை மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு, ஓடிஸா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். தன் உயிரை காப்பாற்றிய தனது தோழி டிக்கி தலாய்கு தனது நன்றியை தெரிவித்து, நேர்ந்த சம்பவத்தை கூறினாள்.

“கிராமத்திலிருந்த குளத்திற்கு நாங்கள் இருவரும் குளிக்க சென்றோம். குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது, மறைவிலிருந்து வெளிப்பட்ட முதலை என்னை தாக்கியது. இதை கண்ட டிக்கி, அருகிலிருந்த மூங்கில் குச்சியால், முதலையின் தலையில் அடித்தாள். வலி தாங்க முடியாமல், முதலை என்னை விட்டு விட்டு நீருக்குள் சென்றுவிட்டது” என்றாள்.

“டிக்கியின் வீர செயலுக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும்” என்று உள்ளூர் தலைவர், பிரதீப் குமார் தாஸ் கூறினார்.

இது குறித்து டிக்கி கூறுகையில்,

“பசந்தியை முதலை திடீரென தாக்கியது. என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ள எனக்கு சிறிய அவகாசமே இருந்தது. சுற்றி பார்த்தபோது, மூங்கில் குச்சி எனக்கு கிடைத்தது. அதை முதலையின் தலையில் அடித்து என் தோழியை காப்பாற்றினேன்” என்றாள்.

ராஜ்நகர் சதுப்புநில வன பிரிவின், பிரதேச வன அதிகாரி, பிமல் பிரச்சன்ன ஆச்சரியா கூறுகையில்,

“முதலையின் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் சிகிச்சைக்கான மருத்துவ செலவை மாநில வனத்துறை பொறுப்பெடுத்துக்கொள்ளும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.

“முதலைகள் இருக்கும் நீர்நிலைகளில் மக்கள் இறங்குவதால் முதலையின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். முதலையின் தாக்குதலிருந்து வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் மனிதர்களை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது போன்ற இடங்களில் மக்கள் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. முதலைகள் எளிதில் நுழையகூடிய குளியல் இடங்களை சுற்றி தடுப்பு சுவரும் எழுப்பப்பட்டுள்ளது” என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க