• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் மாணவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

January 18, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மெரீனா கடற்கரையில் போராடி வரும் மாணவர்களை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வரும் மெரீனா கடற்கரைப் பகுதியில் போராட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மின்சார விளக்குகளை அணைத்து வைத்துள்ள சென்னை மாநகர காவல் துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தைக் காப்பாற்றக் கோரி நடைபெறும் போராட்டப் பகுதியில் அதிமுக அரசு இப்படி இருட்டடிப்பு செய்திருப்பது வேதனையளிக்கிறது.

தன்னெழுச்சியாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு மின்தடை மட்டும் ஏற்படுத்தி விட்டால் போதும் என்ற மனப்பான்மையில் அதிமுக அரசு செயல்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறானது. ஜனநாயக முறையில் நடக்கும் போராட்டங்களை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்வதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கடமை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.

மாணவர்களும், இளைஞர்களும் போராடும் இடத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை முதலில் வழங்கி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

போராடும் மாணவர்களை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க