• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த திருநாவுக்கரசர்

March 18, 2017 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் திடீரென சந்தித்துக் கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவர் வந்த அதே விமானத்தில் திருநாவுக்கரசரும் பயணம் செய்துள்ளார். எனினும், விமானப் பயணத்தின்போது அவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. இருவரும், கோவை விமான நிலையத்தில் திடீரென சந்தித்துப் பேசினர். அப்போது, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

அதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு, கோவையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

இந்நிலையில், முதல்வருடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், “எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள் கூறினேன்” என்றார்.

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் முடிவில் தெரியும்” என்றார் திருநாவுக்கரசர்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, திருநாவுக்கரசர் மீது திமுக கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுக-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் முதல்வரை திருநாவுக்கரசர் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க