• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேற்றும் நோக்கத்தில் இல்லை – ஈஸ்வரன்

November 20, 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களே இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத சூழலில் தற்போது எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் மாவட்டம் தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பது திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தொழில் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் பேசுகையில்

தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருவதாகவும் ஆனால் நாடு முன்னேறிக்கொண்டுள்ளது என மத்திய அரசு விளம்பரப்படுத்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.தொழில்துறை சார்பில் மத்திய அரசிடம் எத்தனையோ மனுக்களை கொடுத்தாலும் அதனை பரிசீலிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் பிரதமர் மோடி உடனடியாக மத்திய அமைச்சர்களை தொழில் பாதிப்பின் உண்மையை உணர்ந்து பாதிப்பை தீர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் ஆந்திர அரசு பில்கேட்சை அழைத்து விவசாயத்தை எப்படி தொழிலாக செய்வது என கருத்தரங்கம் நடத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் விவசாயத்தை பாதுகாக்க என்ன முயற்சி எடுத்தார்கள் என்றும் எத்தனை நாள் அரசாங்கத்தை நடத்த முடியோமோ என்று தான் பார்க்கிறார்கள் என்றும் குறை கூறினார்.

தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான தொழில் அப்படியே நின்றுள்ள நிலையிலும் கப்பலில் வந்து இறங்கியுள்ள மலேசிய மணலை விநியோகிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என கேள்வி எழுப்பிய அவர்,அரசே மணலை இறக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

ஜி.எஸ்.டி யில் மத்திய அரசு எவ்வளவோ பொருட்களுக்கு வரியை குறைத்தாலும் இன்னும் அவற்றின் விலை குறையவில்லை எனவும் இதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதால் மக்களை பாதுகாக்க வேண்டிய செயலை மத்திய அரசு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இதேபோல் தமிழக அரசு உற்பத்தியை பெருக்காமல் இருந்து வருவதாகவும், இதனால் வருமானத்தை அதிகப்படுத்த இயலாமல் தொழில்கள் அனைத்தும் அழிந்து கடன் தான் லட்சக்கணக்கான கோடி உயர்ந்து வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையே இதுவரையில் நிறைவேற்றாத பட்சத்தில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாநிலம் முழுவதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை அறிவித்து கொண்டிருப்பது அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவித்ததாக தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.

மேலும்,தமிழக மீனவர்கள் கடலோர காவல்படையினால் சுடப்பட்ட நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், யார் சுட்டது என்பது தெரியவில்லை விசாரிக்கிறோம் என்று கூறியிறுப்பது நாங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவோம் அதனை வாக்களித்த மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கூறுவதை போல் இருக்கிறது என்றும் தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள் அனைத்தும் திசை திருப்பப்பட்டு மக்களையும் அரசியல் கட்சிகளையும் குழப்பி மத்திய மாநில அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சுட்டி காட்டினார்.

மேலும் படிக்க