• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் – கோவையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

August 13, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக கோவை கவுண்டம்பாளையம் எட்டாவது வட்டம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் காகிதமில்லா இ – பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முறையை பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் அனைத்துத் தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,இதனை கொண்டாடும் விதமாக கோவை கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கோவை மேற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. கவுண்டம்பாளையம் பகுதி எட்டாவது வட்டம் சார்பாக நடைபெற்ற இதில் வட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

தமிழக வரலாற்றில் இது பொன்னான நாளாக பார்ப்பதாகவும்,இது போன்று அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக பட்ஜெட்டை வெளியிட்ட நமது தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் பால் கண்ணன், சக்திவேல், முருகேசன், சண்முகசுந்தரம், லோகநாதன், முத்து, பழனிச்சாமி, மாயி மகேந்திரன், செந்தில்குமார், எட்டாவது வட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் வெங்கடேஷ், சூர்யா,மற்றும் மகளிர் அணியினர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க