March 14, 2018
தண்டோரா குழு
உ.பி. இடைத்தேர்தல் குறித்து முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர்,புல்பூர்ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி,
“சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்) மற்றும் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்) ஆகியோருக்கு வாழ்த்துகள். முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.