April 9, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பாக கொரானா பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே இன்று சமூக வலைதளங்களில் கோவை மாநகராட்சி சார்பாக முககவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என பரவியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபொழுது,முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முக கவசம் அணிய வில்லை என்றால் ரூபாய் 200 மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.