November 1, 2020
தண்டோரா குழு
திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் திருநுறு பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டதாகவும், இதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் திருநீர் பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டதாக தெரிவித்தார். இதற்காக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம் எனவும் அவர் கூறினார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் எனவும்,
இந்த தேர்தலில் கூடுதல் சீட் கேட்பேன் எனவும் கூறிய அவர், தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை எனில், அதிமுகவை ஆதரிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன் எனவும், இன்னும் நூறு பாஜக வந்தாலும் தமிழ் மண்ணில் சமூக நீதி காக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.