• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் நீக்கம்

March 28, 2017 தண்டோரா குழு

நடிகரும் அதிமுக அம்மா கட்சி ஆதரவு எம்எல்ஏவுமான கருணாஸ் முக் குலத்தோர் புலிப்படை சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

கட்சியின் கொள்கைக்கு விரோதமாகவும் தன்னிச்சியாகவும் கருணாஸ் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் எங்களை கட்சியில் இருந்து நீக்கினார்.இது ஏற்புடையதல்ல. பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் தீர்மானத்தின் படி கருணாஸை நாங்கள் கட்சியில் இருந்து நீக்குகிறோம் என்றனர்.

இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக சந்தனகுமாரை நியமித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

மேலும் படிக்க