• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீலாது நபி தினத்தை முன்னிட்டு மாமனிதர் முஹம்மது நபியின் இலவச புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

October 11, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலை பவிழம் ஜுவல்லர்ஸ் அருகே நாலெட்ஜ் சென்டர் புத்தக விற்பனை நிலையம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீலாது நபி தினத்தை முன்னிட்டு மாமனிதர் முஹம்மது நபி அவர்களின் சிறப்புகளை கூறும் புத்தகங்களை பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் 10 நாட்களுக்கு நாலேஜ் சென்டர் அன்பளிப்பாக வழங்கி வருகிறது.

இது குறித்து, நூலகத்தின் தலைவர் உமர் பாரூக் கூறுகையில்,

நாலெட்ஜ் சென்டர் கடந்த நான்கு ஆண்டுகளாக
செயல்பட்டு வரும் இந்த புத்தகம் நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நூலகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மதத்தவர்களும் புரிந்து நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த நூலக மையம் துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசேஷங்களுக்கு அன்பளிப்பு வழங்கும் வகையில் இங்கு புத்தகங்கள் பரிசு பொருளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் அறிவு களஞ்சியமாக இருப்பதற்கும் உதவுகிறது.

இந்த வருடம் முகமது நபி அவர்களின் பிறந்த நாளான மீலாது விழா தினத்தை முன்னிட்டு மாமனிதர் முஹம்மது அவர்களின் சிறப்புகளை கூறும் இம்மாமனிதரை தெரிந்து கொள்ளுங்கள், மானுடம் வசந்தம் முகமது நபிகளார் என்ற இரண்டு தலைப்புகளுடைய புத்தகங்கள் பொதுமக்களுக்கு படித்து பயன்பெரும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த இலவச புத்தகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மேலும் தகவலுக்கு 9751100010 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.

மேலும் படிக்க