• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீனா ஜெயக்குமார் திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

March 7, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமாரை கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பென்ட் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவையை சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். இவர் திமுக மாநில மகளிரணி துணை செயலாளராக இருந்து வந்தார். இதற்கிடையில், மீனா ஜெயக்குமார் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, தேர்தலில் சீட் கிடைக்காததற்கு, மாவட்ட பொறுப்பாளர் கார்த்தி மீது குற்றம் சாட்டியிருந்தார் மீனா.இந்நிலையில்,
கழக கட்டுப்பாட்டை மீறியதால்
மீனா ஜெயக்குமாரை கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பென்ட் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க