• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி 18ல் இருந்து 5 ஆகா குறைக்கப்படும் – சிபிஆர்

March 30, 2019 தண்டோரா குழு

புதிய அரசு பொறுப்பேற்ற உடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. 5 சதவிகிதமாக குறைக்கப்படும் மோடியின் முதல் கையெழுத்து அதுவாக தான் இருக்கும் எனவும் அதிமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் செய்த பல்வேறு நலத்திட்டங்களை இவர்கள் செய்ததாக பொய் பிரச்சாரம் கூறி வருகின்றனர் என பிரச்சாரத்தை துவக்கிய கோவை பாராளுமன்ற வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். அவருடன் வானதி சீனிவாசன், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜுனன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுசெயலாளர் ரகுபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

சாமி தரிசனத்திற்கு பின் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீண்டும் மத்தியில் மோடி அரசு அமையும். நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். முதற்கட்டமாக கோதாவரி காவிரியுடன் இணைக்கப்படும். அதே போல் கோவைக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும். என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அமித்ஷா, மோடி, நிதின்கட்கரி, ஓ.பி.எஸ்., முதல்வர் ஆகியோர் கோவைக்கு வர இருக்கின்றனர். கோவையின் அடிப்படை தேவையான குடிநீர், சாலை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை எதுவும் செய்யவில்லை அதிமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் செய்த பல்வேறு நலத்திட்டங்களை இவர்கள் செய்ததாக பொய் பிரச்சாரம் கூறி வருகின்றனர். மத்திய அரசின் விட்டுப் போன பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார். மேலும் பிரச்சாரத்தின் போது, யார் பிரதமர் என்று கூற முடியாத ஒரு கூட்டம் இங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறது. சிறு குறு தொழில் முன்னேற்றம் இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது. புதிய அரசு பொறுப்பேற்ற உடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. 5 சதவிகிதமாக குறைக்கப்படும் மோடியின் முதல் கையெழுத்து அதுவாக தான் இருக்கும். இதற்கு முன்னதாக பலமுறை கம்யுனிஸ்ட் கட்சியினர் வென்றுள்ளனர். ஆனால் இதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு என எதும் செய்யவில்லை, கடந்த காலத்தில் பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அதிமுக கூட்டணியில் இருந்தது அப்போது தான் சேலம் முதல் கோவை வரையிலான 4வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் ஈ.பி.எஸ். ஆட்சி. வறுமையின் நிறம் சிகப்பு என்பதால் தான் கமலுக்கு கம்யூனிஸ்டுகள் மீது ஒரு பாசம். இந்த அரசை கட்டி காப்போம் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவோம் எனவும் பேசியவர் மக்கள் தங்களது வாக்குகளை தாமரை சின்னத்தில் அளித்து தன்னை வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க