• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் போக்குவரத்து காவலரிடம் சிக்கிய நடிகர் ஜெய்!

June 27, 2018 தண்டோரா குழு

சென்னை 28, சுப்பிரமணியபுரம், திருமணம் என்னும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய்.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி குடிபோதையில் காரை ஓட்டி பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.இந்த விபத்து கராணமாக அவர் மேல் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஆனால் நடிகர் ஜெய்,விசாரணைக்கு ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.இதையடுத்து நடிகர் ஜெய்,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.காலையிலிருந்து மாலை வரை ஜெய்யை நிற்கவைத்த மாஜிஸ்ட்ரேட் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்ததுடன் ரூ.5200 அபராதமும் விதித்தார்.

இந்நிலையில்,நேற்று அடையாறு பகுதியில் நடிகர் ஜெய் தனது சொகுசு காரில் அதிக சப்தத்தை ஏற்படுத்தும் சைலன்ஸர் வைத்து ஓட்டிமீண்டும் போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கினார்.இதையடுத்து அவரது காரில் உள்ள சைலன்ஸர் மாற்றப்பட்டது சட்டப்படி குற்றம் என தெரிவித்த போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்து சைலன்ஸரை மாற்றச் சொன்னார்கள்.

அப்போது,நடிகர் ஜெய் வீடியோவாக இதை நான் மக்களுக்கான மெசேஜாக சொல்லி விடுகிறேன் என்று சொல்லி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,தனது காரை ஸ்டார்ட் செய்ய சொல்லி அதன் சப்தத்தை சுட்டிக்காட்டும் ஜெய் “இது மாதிரி சவுண்ட் அதிகம் வைத்தால் போக்குவரத்து போலீஸார் உடனே பிடிப்பார்கள்.

இது போன்ற அதிக சத்ததுடன் சென்றீர்களானால் பொதுமக்கள்,மருத்துவமனைகள்,பறவைகள், குழந்தைகள் என பலருக்கும் பாதிப்பு ஏற்படும்,ஆகவே இது மாதிரி சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸரை பொருத்தி ஓட்டக்கூடாது என்றும் அப்படி வந்தால் கார் பறிமுதல் செய்யப்படும். ஆகவே சரியான சைலன்ஸ்ருடன் ஓட்டுங்க அதிக சத்தம் வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்” இவ்வாறு கூறினார்.தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க