• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு ; வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுமா ?

May 15, 2017

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த 47 தொழிற் சங்கத்தினருக்கு தொழிலாளர் துறை ஆணையர் யாசின்பேகம் அழைப்பு விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். 3௦ சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் போக்குவரத்து ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் துறை ஆணையர் யாசின்பேகம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே போக்குவரத்து அமைச்சருடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அதிகாரிகள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க