• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“மீண்டும் பள்ளிக்கு போகலாம்“ அறுபது ஆண்டு கால மாணவர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு

January 3, 2017 தண்டோரா குழு

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள மன்பஉல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் “முன்னாள் மாணவர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி” அண்மையில் நடைபெற்றது.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மன்பஉல் உலூம் மேல்நிலைப் பள்ளி 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு “மீண்டும் பள்ளிக்கு போகலாம்“ என்ற நிகழ்ச்சியைப் புத்தாண்டு தினத்தன்று பள்ளி மைதானத்தில் நடத்தியது. இதில், 1950 ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட நீதிபதியும், அப்பள்ளியின் முன்னாள் மாணவருமான ஜியாவுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியவர்கள்:

மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன்:

“மகிழ்வான இந்த நிகழ்வில் – மலர்களாகச் சங்கமித்து உள்ள அனைத்து முன்னாள் மாணவர்களையும், நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ஆசிரியர்களை காணும்போது, என் பள்ளி நாட்களின் மகிழ்வான நினைவுகள் நெஞ்சுக்குள் நிழலாடுகின்றன”.

திருப்பூர் மாவட்ட நீதிபதி – முன்னாள் மாணவர் ஜியாவுதீன்:

“இது நாள் வரை இந்த பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வுகளில் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை நேசிக்க வேண்டும். அதன் வளர்ச்சியிலும் , மாணவ சமூகத்தின் முன்னேற்றத்திலும் பங்காற்ற வேண்டும்”.

ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் அப்பாஸ்:

“நம் பள்ளி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் குறைவாக உருவாக்கி இருக்கலாம். ஆனால், சமூக அக்கறை உள்ள நபர்களையும், சமூகத்தை வழிநடத்தும் பண்புள்ள தலைவர்களையும் உருவாகியுள்ளது இப்பள்ளி. எண்பது ஆண்டு கால பாரம்பரியம் உள்ள பள்ளியில் முதல் முறையாக நடக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்”.

மேலும், இப்பள்ளி தொடங்கிய நாள் முதல், இந்நாள் வரையிலான அனைத்து ஆசிரியர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பங்கேற்ற அவர்களுக்கு மாணவர்கள் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்ன. அதைப் போல் அறுபது ஆண்டு கால நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறைகளுக்குச் சென்றும், தங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டும் மகிழ்ந்தார்கள்.

“இனி வரும் காலங்களில் நடத்தப்படும் இது போன்ற சந்திப்பு நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்வோம்” எனக்கூறி கண்ணீரோடு பிரிந்து சென்றனர்.

மேலும் படிக்க