• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் கோவையில் போட்டியிடுகிறேன் – கமல்ஹாசன்

September 22, 2023 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நிர்வாகிகளிடையே பேசிய அவர்,

சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள் எனவும் அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம் என்றார். மேலும் எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார் எனவும் சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல, சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார் என்றார்.

திமுகவோ, வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிய அரசு சீக்கிரம் கொண்டு வருவார்கள் என கூறிய அவர் கடந்த தேர்தலில் ஜெயித்திருந்தால் எம்எல்ஏ இல்லையென்றால் போதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன் எனவும் என் முகத்தில் அப்போது சோகம் இல்லை, அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாக கூடாது என்று நினைத்தாக கூறினார்.

மநீமவை பொருத்தவரை எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது, தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள், அதே சமயம் சென்னைக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு தான் கேட்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க