• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் கடுமையான ஊரடங்கு வருமா? – அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

June 11, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று குறித்து கண்டறிய 20 ஆயிரம் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தேவைக்கேற்ப கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரானா தொற்றுக்கான சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின்னர் அமைச்சர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ,

கொரானா தொற்றுக்கு என சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ள கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கூடுதலாக 400 படுகைகள் அமைக்கப்பட இருக்கிறது.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 280 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து திரும்பி இருக்கின்றனர். இங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னையில் இந்த பணிகள் சவாலாக இருந்தாலும் அதை அரசு சிறப்பாக எதிர் கொண்டு வருகின்றது. பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து வருபவர்களை அரசு கவனத்தோடு கையாள்கின்றது.அவர்களை எல்லையிலேயே முழு சோதனை செய்த பின்னரே அனுப்புகின்றோம்.இந்த கொரொனா வைரஸ் புது வகையான வைரஸ் என்பதால் இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று தொடர்பான டேட்டாவை கொண்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றது என்றார்.

மீண்டும் லாக்டவுண் என்ற பேச்சு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது தொடர்பான கேள்விற்கு, லாக்டவுண் குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ குழுவினரை அழைத்து பேசி முதல்வர் முடிவெடுப்பார் என பதிலளித்தார். மருத்துவ குழு ஆலோசனை பெற்றே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக பணிநியமனம் வழங்கப்பட்ட மருத்துவர்கள் , பணியாளர்கள் 2814 பேர் பணியில் சேர்ந்து கொண்டு இருக்கின்றனர். தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சமூகப்பரவல் இருக்கின்றதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும் எனவும், இந்தியாவில் இதுவரை சமூக பரவல் இருப்பதாக எங்கும் சொல்லப்பட வில்லை எனவும் தெரிவித்தார்.

சென்னையில் கொரொனா தொற்றுக்காக ஏற்கனவே 17500 படுக்கைகள் இருப்பதாகவும் கூடுதலாக 5000 படுக்கைகள் சென்னையில் ஏற்படுத்தபட இருக்கின்றது. 20 ஆயிரம் pulse oximeter கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், கூடுதலாக கொள்முதல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் சென்னையில் தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, கொரொனா தொடர்பாக தேவையில்லாமல் விசமத்தனமான புரளிகள் கிளப்பி விடப்படுகின்றது எனவும், சென்னையில் இருந்து நோயாளிகள் யாரும் கோவைக்கு கொண்டு வர படவில்லை எனவும், புரளியை கிளப்புவர்கள் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க