• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் இல்லை

August 8, 2022 தண்டோரா குழு

மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்று திரும்பிய நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

மரியாதையை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன்.தமிழ்நாட்டிற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக ஆளுநர் கூறினார்.தமிழ்நாட்டின் ஆன்மீக உணர்வு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிகம் ஈர்த்துள்ளது. அரசியல் குறித்தும் ஆளுநரிடம் விவாதித்தேன்.மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஜெயிலர் படப்பிடிப்பு ஆக.15ல் தொடங்கும் என்றார்.

மேலும் படிக்க