• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் – ஸ்டாலின்

January 31, 2018 தண்டோரா குழு

பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக வரும் 6-ம் தேதி மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொளத்தூர், அயனாவரம் பகுதியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். பின்னர் கொளத்தூர் தொகுதி நிதியிலிருந்து சத்துணவு சமையல் கூடம் கட்டும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவித்து, வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை, முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கர்நாடக முதலமைச்சரை சந்திக்க அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களையும் முதலமைச்சர் அழைத்துச் செல்ல வேண்டும். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தும் காவிரி பிரச்சனை குறித்து வலியுறுத்த வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக வரும் 6-ம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க