July 8, 2021
தண்டோரா குழு
இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டுக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன்படி 2021 ஜனவரி 1-ந் தேதி 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் வருமானச் சான்று, தமிழ் பணியாற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணியாற்றுவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவபடியாக ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.