• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மியாவாக்கி முறையில் 3500 மரக்கன்றுகளை நட்ட பிக்கி ஃப்ளோ பெண் அமைப்பு

August 22, 2021 தண்டோரா குழு

மியாவாக்கி முறையில் பிக்கி ஃப்ளோ பெண் அமைப்புகளின் சார்பில் 3500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

உலகம் முழுவதும் மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் கோவை செட்டிபாளையம் பகுதியில் இடைவெளி இல்லா அடா்காடு என்ற தத்துவப்படி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் பிக்கி ஃப்ளோ மற்றும் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை, சுகம் குழுமம் ஆகியோர் இணைந்து 3500 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆண்டுக்குள் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்,மாசுபடுதலை குறைத்தல், சுற்றுச்சூழலை நிலைத்திருக்கச் செய்தல் மற்றும் சுத்தமான, பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குவதின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.

இதில் பிக்கி ஃப்ளோ ரித்திஷா நிவேதா, சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை தலைவர் சசிகலா,திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், செட்டிபாளையம் பேரூராட்சி செயலர் ஜெகதீஷ் ,குறிச்சி பிரபாகரன்,மதுக்கரை ராஜசேகர்,திமுக பகுதி பொறுப்பாளர் ரங்கசாமி, ஜெயபிரகாஷ் மற்றும் ஃப்ளோ உறுப்பினர்கள் மஞ்சு இளங்கோ, காமினி சுரேந்திரன்,அபர்ணா சுரேன், உள்ளிட்ட தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மரங்களை நடவு செய்தனர்.

மேலும் படிக்க