• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின் கம்பம் சரிந்து விழுந்து முதியவர் பலி

March 9, 2022 தண்டோரா குழு

காரமடை காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (62),தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தோலம்பாளையம்- காரமடை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது,அவ்வழியாக சென்ற போர்வெல் லாரி மேலே சென்ற மின்சார வயரில் சிக்கியது. இதை கவனிக்காமல் டிரைவர் லாரியை ஓட்டினார். இதில், அப்பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று சரிந்து நடந்து சென்ற சண்முகம் மீது விழுந்தது. இதில், அவர் பலத்த காயமடைந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முகம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க